எண்ணெய் குதங்கள் வழக்கு: ​ஆட்சேபனைகளுக்கு அனுமதி

Mayoorikka
4 years ago
எண்ணெய் குதங்கள் வழக்கு: ​ஆட்சேபனைகளுக்கு அனுமதி

திருகோணமலை எண்ணெய் குதங்களின் அபிவிருத்தித் தொடர்பாக இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை வலுவற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பிரதிவாதிகளான சட்டமா அதிபர், நிதியமைச்சர் உள்ளிட்டவர்களுக்கே, உயர் நீதிமன்றம் நேற்று (28) அனுமதியளித்துள்ளது.

இந்த ஆட்சேபனைகளை மார்ச் மாதம் 11 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுக்களில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள கலாநிதி பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதி செயலாளராக தற்போது பதவி வகிக்கவில்லை. ஆகையால், பிரதிவாதிகளின் பெயர்ப்பட்டியலை திருத்துவதற்கு அனுமதி வழங்குமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கைக்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

 திருகோணமலை எண்ணெய் குதங்களின் அபிவிருத்தித் தொடர்பாக ஒப்பந்தத்தை சவாலுக்கு உட்படுத்தி, எல்லே குணவங்ச தேரர் , பெங்கமுவே நாலக்க தேரர், தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளர் வக்கமுல்லே உதித்த ​தேரர் ஆகியோரினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4