முற்றத்தில் அழகுக்காக வைத்திருந்த கனரக தோட்டா வெடித்ததில் சிறுவன் படுகாயம்

Prathees
4 years ago
முற்றத்தில் அழகுக்காக வைத்திருந்த கனரக தோட்டா வெடித்ததில் சிறுவன் படுகாயம்

கொஸ்கம சாலாவ பகுதியில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் கனரக தோட்டா ஒன்று வெடித்ததில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த மாணவன்  கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் காயமடைந்தவர் கொஸ்கமஇ சாலாவ, இலக்கம் 44 இல் வசிக்கும் ஜினன் சமீர அதபத்து (15) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (27ம் திகதி) மாலை சுமார் 6.00 மணியளவில் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது கனரக தோட்டா வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

2016 இல் சாலாவ இராணுவ ஆயுதக் களஞ்சியம் வெடித்தபோது, ​​அருகில் உள்ள வீடுகள் மீது பாரிய வெடிமருந்துகள் வீசப்பட்டன. அவ்வாறு விழுந்த தோட்டாவை வீட்டின் உரிமையாளர் முற்றத்தில் அழகுக்காக வைத்துள்ளார்.

காயமடைந்த சிறுவன் முதலில் சாலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4