காதலியை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்த காதலன்

Prathees
4 years ago
 காதலியை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்த காதலன்

 17 வயது சிறுமியுடன் லிவ்விங் டுகெதர்  என்ற முறையில் வாழ்ந்து  வேறு நபர்களுக்கு சுமார் 3500 ரூபாய்க்கு விற்ற இளைஞனையும் சிறுமியை பல சந்தர்ப்பங்களில் விலைக்கு வாங்கிய இரண்டு பாடசாலை மாணவர்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் ஜா-எல ஏகல பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 22 வயதுடைய ஒருவரும்இ மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள 19 வயதுடைய இரு மாணவர்களுமாவர்.

தந்தையை இழந்து,   தாயின் பராமரிப்பில் இருந்த 17 வயதுடைய ஆடைத் தொழிற்சாலைக்கு  செல்லும் சிறுமியே பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய 17 வயதுடைய சிறுமி, ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 22 வயதுடைய சந்தேகநபரை காதலித்து, பின்னர் ஏகல பகுதியில் உள்ள வாடகை வீட்டில்  காதலனுடன் சேர்ந்து வாழ  ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காதலனின் வற்புறுத்தலின் பேரில் அவள் மற்றவர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டியிருந்ததாகவும்  தனது காதலன் தன்னை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்வதாகவும், மோட்டார் சைக்கிளில் வரும் பல்வேறு நபர்கள் தன்னை அழைத்துச் செல்வதாகவும்  சிறுமி குறிப்பிட்டுள்ளார்.

தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்த காதலன், விரைவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி தாயிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் கூட தன் காதலன் தன்னைப் பார்க்க வராததால் அவனைத் தேட வேண்டியிருந்தது எனவும்  கிடைத்த தகவலில் அவர் திருமணமாகி குழந்தையுடன் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அவரை கண்டுபிடிக்க முடியாததால்இ தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உதவி கோரி ஜா-எல பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் காதிக்கப்பட்ட சிறுமி  குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4