வீட்டில் சிகிச்சை பெறும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

#Covid 19
Prathees
4 years ago
வீட்டில் சிகிச்சை பெறும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது 6,600ஐ தாண்டியுள்ளதாக சுகாதார அமைச்சின் கொவிட் வீட்டு சிகிச்சைப் பிரிவின் வைத்திய நிபுணர்  மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.

மூன்று வாரங்களுக்கு முன்பு, இந்த பிரிவில் சுமார் 1,500 கொவிட் நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 17 ஆம் திகதி முதல் தற்போது வரை  தினமும் 700 க்கும் மேற்பட்ட நோயாளிகள் கொவிட் வீட்டு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4