விமான நிலையத்தில் வெளிநாட்டு நாணயங்களுடன் 5 பேர் கைது

Prathees
4 years ago
விமான நிலையத்தில் வெளிநாட்டு நாணயங்களுடன் 5 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை தமது பயணப் பொதிகளில் கொண்டு செல்ல முற்பட்ட ஐவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பணத்தில் அமெரிக்க டாலர் 95,000 மற்றும் 18,000 யூரோ மற்றும் 37,000 சவுதி ரியால்கள் என்பன அடங்கும்.

இலங்கையில் இந்த நாணயத்தின் பெறுமதி சுமார் 25 மில்லியன் ரூபாவாகும்.

சந்தேக நபர்களிடம் இலங்கை சுங்க மற்றும் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4