கமல் குணரத்ன, சவேந்திர சில்வா உட்பட 28 இராணுவ வீரர்கள் மீது பொருளாதார தடை விதிக்க திட்டம்

Prathees
4 years ago
கமல் குணரத்ன, சவேந்திர சில்வா உட்பட 28 இராணுவ வீரர்கள் மீது பொருளாதார தடை விதிக்க திட்டம்

இலங்கை இராணுவத்தினர் 28 பேர் மீது பொருளாதார தடைகளை விதிக்க கலந்துரையாடப்பட்டு வருவதாக பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் அமண்டா மிலின் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றி உள்ளார்.

அவர்களின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களைத் தடை செய்யவே இந்த தடை விதிக்கப்படவுள்ளது.

குநித்த பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

இலங்கை இராணுவ வீரர்கள் மீது தடைகளை விதிக்கும் நோக்கத்தை பிரித்தானிய அரசாங்கம் ஏன் கொண்டிருக்கவில்லை என புலிகள் சார்பான பாராளுமன்ற உறுப்பினர் சியோப்கன் மெக்டொனாக் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன ஆகியோரும் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் இராணுவ வீரர்களின் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4