கிளிநொச்சி மருத்துவர் பிரியந்தினி விவகாரத்தில் நடந்த மர்மம். வெளியான பின்னணி யார்?

Keerthi
4 years ago
கிளிநொச்சி மருத்துவர் பிரியந்தினி விவகாரத்தில் நடந்த மர்மம். வெளியான பின்னணி யார்?

கிளிநொச்சி - தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசாலையில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்தமை தொடர்பில் கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கிளிநொச்சி மருத்துவர் பிரியந்தினி விவகாரம் தற்போது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு செயலாளர் சிங்கராஜா ஜீவாநந்தம் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மருத்துவர் கண்டாவளை MOH Dr.Priyaanthini க்கு தொலைபேசியில் அச்சுறுத்தியவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,சந்தேக நபரை 03.02.2022 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் கடந்த மாதம் கண் பரிசோதனைமேற்கொண்ட தனியார் கண் மருத்துவ நிறுவனம் ஒன்று 71 மாணவர்களுக்கு கண்பாதிப்பு உண்டு எனத் தெரிவித்து அவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள தங்களதுமருத்துவ நிலையத்திற்கு மேலதிக பரிசோதனைக்காக வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில் கண்டாவளை M.O.H பிரிவு இப்போதுதான் புத்துணர்வு பெற்று எழுந்துகொண்டிருக்கிறது அதற்கு காரணம் இப்போது அங்கு MOH ஆக பணிக்கு வந்துள்ள Dr. Priyaanthini Kamalasingam அவர் துணிச்சலாக மருத்துவத்துறைக்குள் நடக்கும் ஊழல்களை ஒத்துழைப்பின்மையை பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார்.

ஒரே நாளில் ஒரு கிராமத்தை சேர்ந்த 300 க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கண்ணில் குறைபாடு உள்ளது அவர்கள் கண்ணாடி பாவிக்க வேண்டும் என ஒரு பாடசாலை அதிபர் ஊடாக மாபெரும் மருத்துவ கொள்ளையில் ஈடுபட இருந்த நபர்களை இனம்காட்டி அந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தியும் இருந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து Dr. Priyaanthini Kamalasingam தொலைபேசியில் சில மர்மநபர்கள் மிரட்டல் விடுத்திருந்த நிலையில் அது குறித்து அதேவேளை வைத்தியர் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
இப்படியான சிலர் அரசியல் பின்னணியின் ஆதரவோடு இயங்குவதாக பல குற்றசாட்டுக்களும் . பொலிசாருக்கு கிடைத்துள்ளதாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4