2022 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு உள்வாங்கப்பட்ட மாணவர்களின் பெயர்களை வெளியிடுமாறு கோரிக்கை

Prathees
4 years ago
2022 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு உள்வாங்கப்பட்ட மாணவர்களின் பெயர்களை வெளியிடுமாறு கோரிக்கை

2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ள மாணவர்களின் பட்டியலை வெளியிடுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா அதிபர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேர்முகத்தேர்வு நடத்தி தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளின் பட்டியல் வெளியிடப்படாமையால் தமது பிள்ளைகள் தெரிவு செய்யப்படாவிடின் மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்வதற்கான சந்தர்ப்பம் தாமதமாகும் என பெற்றோர்கள் கல்வி அமைச்சுக்கு தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள பல பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலை தாம் வெளியிட்ட போதிலும் பல பாடசாலைகள் அவ்வாறு வெளியிடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரும் நாட்களில் அந்தப் பாடசாலைகளும் தங்கள் பட்டியலை வெளியிடும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4