நாட்டை அச்சுறுத்தும் மற்றுமொரு நோய்! 81 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்கு எச்சரிக்கை

Mayoorikka
4 years ago
நாட்டை அச்சுறுத்தும் மற்றுமொரு நோய்! 81 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்கு எச்சரிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் 12 மாவட்டங்களும்,  81 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு அபாயப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், புத்தளம், காலி, யாழ்ப்பாணம், கண்டி, இரத்தினபுரி, அம்பாறை, திருகோணமலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், ஜனவரி மாதத்தில் மாத்திரம் 7,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள அதேவேளை, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4