மரம் வெட்டும் இயந்திரத்தினால் கொலை செய்யப்பட்ட நபர்! கைதானார் பெரியப்பா

Mayoorikka
4 years ago
மரம் வெட்டும் இயந்திரத்தினால் கொலை செய்யப்பட்ட நபர்! கைதானார்  பெரியப்பா

மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, நபர் ஒருவரின் கால்களைத் துண்டாக்கி, அவரைக் கொலை செய்த சம்பவமானது கட்டுகஸ்தோட்டைப் பகுதியில் பதிவாகியுள்ளது.

நேற்று (30) இருவருக்கிடையில் வேலி எல்லைப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதால், ஒருவர் மற்றையவரின் கால்களை மரம் வெட்டும் இயந்திரத்தைக் கொண்டு துண்டுகளாக்கியுள்ளார்.

இதனையடுத்து கால்கள் துண்டாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 28 வயதான திருமணமாகாதவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவ்வாறு கைது செய்யப்பட்டவர் உயிரிழந்தவரின் சித்தப்பா என்பதுடன், இவர் தொழில் ரீதியாக மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் என்றும்  தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4