பாகிஸ்தானிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி பெறுவதற்கு இலங்கை பேச்சுவார்த்தை

Mayoorikka
4 years ago
பாகிஸ்தானிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி பெறுவதற்கு இலங்கை பேச்சுவார்த்தை

அரிசி, சீமெந்து மற்றும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக பாகிஸ்தானிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி பெறுவதற்கு இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சர், அண்மையில் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போதே கடன் பெறுவது தொடர்பான விடயதானங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

கடனுதவியின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வது அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து, பாசுமதி அரிசி மற்றும் மருந்துகளை இந்த வருடம் கடனுதவியின் கீழ் இறக்குமதி செய்யவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4