வெளியான தகவல்களில் திருப்பம்: கத்தார் உயிரிழந்தவர் இலங்கையர் அல்ல

Mayoorikka
4 years ago
வெளியான தகவல்களில் திருப்பம்: கத்தார்  உயிரிழந்தவர் இலங்கையர் அல்ல

கத்தாரின் தோஹாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் இலங்கையர் அல்ல

என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) உறுதிப்படுத்தியுள்ளது.

பல ஊடகங்களில் வெளியான இந்த செய்தி தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன விசேட கவனம் செலுத்தினார். அதன்படி, கத்தாரில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தொழிலாளர் பிரிவுக்கு அவர் உடனடியாகத் தகவல் அளித்து இது குறித்து ஆராயுமாறு கூறினார்.

இதன்படி கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்தின் தொழிலாளர் பிரிவு பிரதானி சட்டத்தரணி கீர்த்தி முத்துக்குமாரன அப்பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

 உயிரிழந்தவர் இலங்கையர் இல்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். பின்னர், அப்பகுதியிலுள்ள வைத்தியசாலையை சோதனையிட்டபோதும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் சடலம் காணப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4