டெங்கு காரணமாக பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

#Jaffna
Nila
4 years ago
டெங்கு காரணமாக பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சப்ரகமுவா பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தார்.

இணுவில் மேற்கைச் சேர்ந்த 23 வயதுடைய சிவகரநாதன் திவாகரி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த மாணவி அனுமதிக்கப்பட்ட போது பெறப்பட்ட குருதி மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி டெங்கு காரணமாக உயிரிழந்தாரா என்பது தொடர்பில் கண்டறியுமாறு பணிக்கப்பட்டது.

காய்ச்சல் காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் இன்று திங்கட்கிழமை காலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4