மிஷ்கினின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி

Prabha Praneetha
4 years ago
மிஷ்கினின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக மிஷ்கின் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிப்பதாக தகவல் வெளியாகிறது.

அஞ்சாதே, நந்தலாலா, பிசாசு, துப்பறிவாளன் போன்ற பல படங்களை இயக்கியவர் மிஷ்கின். சமீபத்தில் இவர் விஷாலுக்கும் இவருக்கும் நடந்த பிரச்சனையில் அவர் துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து விளகினார். தற்போது இவர் பிசாசு 2 என்ற படத்தை இயக்கிவருகிறார். 

பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளிவர காத்திருக்கிறது.

கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் சிறிய வேடத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். 

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து மிஷ்கின் ஒரு படத்தை இயக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4