மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களினால் கொழும்பில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

Mayoorikka
4 years ago
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களினால் கொழும்பில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

வெல்லம்பிட்டிய, சாலமுல்ல கமகேவத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

படுகாயமடைந்தவர் ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர்.

காயமடைந்த நபர் மற்றுமொரு பெண்ணுடன் முச்சக்கர வண்டியில் கமகேவத்தை நோக்கி பயணித்த போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகபொலிஸார் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4