சுவிசில் வீட்டு வாடகைகள் அதிகரிப்பு...அதிகம் பாதிப்படையும் வெளிநாட்டவர்கள்.
சுவிட்சர்லாந்தின் Zurich மற்றும் Geneva ஆகிய பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் வீட்டு வாடகைகளால், மக்கள் சிறிய நகரங்களை நோக்கி படை எடுக்க தொடங்கியுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Geneva நகரத்தில் 90-120 சதுர மீட்டர் கொண்ட ஒரு மனையின் வாடகை விலை 3500 பிராங்குகளாக உள்ளது. இதேவேளை Zurichயில் இரண்டு அறைகள் கொண்ட ஒரு மனையின் வாடகை கட்டணம் மாதத்திற்கு 1650 பிராங்குகளாக உள்ளது.. சதவீத வாரியாக 4.2% முதல் 9.5% வரை வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளன. இந்த தகவல்கள் comparis.ch என்ற இணையதள ஒப்பீட்டு நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்விற்கு மக்கள் தனியாக வாழ ஆரம்பித்ததே முதற்காரணம் என்று comparis.chவின் சேர்ந்த Leo Hug தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழிமுறைகள் தற்போது Genevaவில் குறைந்து வருவதாகவும், Zurichயில் இத்தகைய குடியேற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மத்திய சுவிட்சர்லாந்தில் உள்ள Lucerne என்ற பகுதியில் அதிகபட்சமாக 2 அறைகள் கொண்ட வீட்டின் வாடகை சராசரியாக 4.8% உயர்ந்து மாதத்திற்கு 1300 பிராங்குகள் என்ற அளவில் காணப்படுகிறது. இந்த விலை உயர்விற்கு மக்கள் பெரும் அளவு சிறிய நகரங்களில் இருந்து குறிப்பிட்ட சில நகரங்களுக்கு இடம்பெயர்ந்ததே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலையுயர்வு எல்லாநகரங்களையும் பாதிக்கவில்லை, சில நகரங்களில் மாற்றம் எதுவும் இன்றியும்,சில நகரங்களில் விலை குறைந்தும் உள்ளது. உதாரணமாக தெற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள Lugano பகுதியில் 4.5 என்ற அளவு கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கான வாடகை மாதத்திற்கு 1900 பிராங்குகளில் இருந்து 1700 பிராங்குகளாக குறைந்துள்ளது. இது genevaவின் அடுக்குமாடி குடியிருப்புக்கான வாடகைகளை ஒப்பிடுகையில் அதன் பாதி வாடகை என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில், சூரிச் மற்றும் ஜெனீவா ஆகியவை உலகின் மிகவும் செலவுமிக்க நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.