பூசாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இரும்புச் சாத்தானால் பலி

Prathees
4 years ago
பூசாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இரும்புச் சாத்தானால் பலி

பூஸ்ஸ வெல்லபட புகையிரத கடவையில் நேற்று (1ம் திகதி) காலை பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த விரைவு ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்

உயிரிழந்தவர்கள் புஸ்ஸ பரணவத்தையைச் சேர்ந்த கலிங்க ஜினதாச (85), கலிங்க சுனிமல் - 46, மகனின் மனைவி - லசிகா குமாரி மெண்டிஸ் (48) மற்றும் லசிகா குமாரியின் தாயார் மணிமெல்துர அமிஷாமி (83) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் பிரதேச கிராம உத்தியோகத்தரை சந்தித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புகையிரத கடவையில்  கேட் இல்லாமல் சமிக்ஞை ஒளியில் செயல்படுத்தப்படுகிறது.

முச்சக்கர வண்டியை அவரது மகன் ஓட்டிச் சென்றுள்ளார். எச்சரிக்கையை மீறி பாதுகாப்பற்ற பாதையில் சென்றதால் ரயிலில் அடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் முச்சக்கரவண்டி நிலைதடுமாறி வீதியின் ஓரத்தில் இருந்த சமிக்ஞைப் பெட்டியில் மோதியுள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வரில் ஒருவர் அருகில் உள்ள வீட்டின் படிக்கட்டில் விழுந்துள்ளார்.

ஒருவர் தண்டவாளத்தில் விழுந்ததுடன் மேலும் இருவர் முச்சக்கரவண்டியில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரயில்வே கேட் இருந்திருந்தால் விபத்தை தடுத்திருக்கலாம் என சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை இன்று (2ம் திகதி) கராப்பிட்டிய வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4