யாழில் வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டகாசம்: மூன்று பேர் கைது

#Jaffna
Nila
4 years ago
யாழில் வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டகாசம்: மூன்று பேர் கைது

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தியவர்களை விரைந்து செயற்பட்ட கோப்பாய் பொலிசார் மூவரை கைது செய்துள்ளனர்.

 குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்று கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் மீது அத்துமீறி நுழைந்து தாக்குதலை நடத்தியது.
 
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விரைந்து செயற்பட்ட கோப்பாய் பொலிஸர் சந்தேகநபர்களை கைது செய்தனர்.
 
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ் வண்ணார்பண்ணை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் காதல் விவகாரம் காரணமாக இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
 
கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4