தனியார் துறையினர் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் !

#Sri Lanka President
Nila
4 years ago
தனியார் துறையினர் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் !

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை தனியார் துறைக்கும் வழங்க அரசாங்கம் தலையிட வேண்டும் என நிறுவன ஊழியர் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

உயரும் வாழ்க்கைச் செலவில் கவனம் செலுத்தும் முடிவை எடுக்குமாறு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் வாழ்க்கைச் செலவு உயரும் போது உழைக்கும் மக்கள் அவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் பெற வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் துறை ஊழியர் ஒருவருக்கும் 5000 ரூபாவை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அச்சங்கம் வலியுறுத்துகிறது.

நாட்டின் உற்பத்தி செயல்முறையில் 80 சதவிகிதம் மற்றும் தொழிலாளர்களில் 80 சதவிகிதம் பேர் தனியார் துறையில் உள்ளனர்.

அவர்களில் 60 வீதமானவர்கள் 25,000 ரூபாவிற்கும் குறைவாகவே வருமானம் ஈட்டுகின்றனர்.

இவர்களுக்கு, 5,000 கொடுப்பனவு வழங்குவதன் மூலம் தனியார் நிறுவன ஊழியர்களின் சிரமத்தை போக்க முடியும் எனவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4