பேசித் தீர்த்துக்கலாம் என்ற ரஜினி.. ஐஸ்வர்யா சொன்ன ஒரு வார்த்தை

Prabha Praneetha
2 years ago
பேசித் தீர்த்துக்கலாம் என்ற ரஜினி.. ஐஸ்வர்யா சொன்ன ஒரு  வார்த்தை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மருமகன் மற்றும் மகளின் பஞ்சாயத்து தான் கடந்த சில வாரங்களாகவே சினிமா வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து பெறவில்லை எனவும் இருவரும் தற்காலிகமாக பிரிந்து வாழ்கின்றனர் எனவும் ஒரு செய்தி.

இன்னொரு பக்கம் இருவரும் விவாகரத்து வாங்கி விட்டனர் தற்போது இருவரில் யார் அவர்களுடைய வாரிசுகளை வளர்க்க போகிறார்கள் என்ற பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது என ஒரு பக்கம். ரஜினி மற்றும் கஸ்தூரி ராஜா ஆகியோர் ஒரு பக்கம் இதைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர் என்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் ரஜினியின் குடும்பத்தில் தினமும் ஒரு குண்டு வெடித்து கொண்டுதான் இருக்கிறது. இதுக்கெல்லாம் ஆரம்பப் புள்ளியே ரஜினி தன்னுடைய இளைய மகளுக்கு தற்போது தங்கியிருக்கும் போயஸ்கார்டன் வீட்டை எழுதி கொடுத்தது தான் என்கிறார்கள்.

இது உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகிய இருவருக்கும் சொத்து தகராறு ஏற்பட்டது எனவும் செய்தி வந்துள்ளன.

தனுசுக்கு ரஜினியின் தற்போது இருக்கும் வீட்டின் மீது ஒரு கண் எனவும் கூறுகின்றனர்.அது கைவிட்டுப்போன விரக்தியில் தினமும் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஆகிய இருவருக்கு இடையில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்ததாகவும் ஒரு கட்டத்தில் இருவரும் இனிமேல் சேர்ந்து வாழ முடியாது எனவும் கூறி விட்டு பிரிந்து விட்டதாக ரஜினி வட்டாரங்களில் கசிந்து தகவலாக இருக்கிறது.

இந்நிலையில் ரஜினி தொடர்ந்து தன்னுடைய மகளிடம் தான் இப்போது இருக்கும் அந்தஸ்துக்கு நீ விவாகரத்து செய்தால் என்னுடைய மானம் மரியாதை போய்விடும் என எவ்வளவோ கெஞ்சிப் பார்த்து விட்டாராம்.

ஆனால் ஐஸ்வர்யா இனிமேல் தனுஷுடன் சேர்ந்து ஒரு நாள் கூட வாழ முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!