‘பாரத் அஷ்மிதா’ விருது பெற இருக்கும் பிரபல இயக்குனர் மணிரத்னம்

#TamilCinema
Prasu
4 years ago
‘பாரத் அஷ்மிதா’ விருது பெற இருக்கும் பிரபல இயக்குனர் மணிரத்னம்

பகல் நிலவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மணிரத்னம். மௌன ராகம், நாயகன், தளபதி, ரோஜா, ராவணன் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இவருக்கும் மராட்டிய மாநிலம் புனேவில் அமைந்துள்ள எம்.ஐ.டி. உலக அமைதி கல்வி நிறுவனம் இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்வு செய்து அதில் ஐவருக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 

அதன்படி இந்த வருடம், திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக, இயக்குனர் மணிரத்னத்திற்கு வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி இணைய வழியில் ‘பாரத் அஷ்மிதா’ விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிப்பை அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4