சென்னை புழல் சிறையில் உள்ள 4 இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்களை விடுவிக்க வேண்டும்! சீமான் கோரிக்கை

Reha
4 years ago
சென்னை புழல் சிறையில் உள்ள 4 இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்களை விடுவிக்க வேண்டும்! சீமான் கோரிக்கை

சென்னை புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ்  கடற்றொழிலாளர்கள் நால்வரையும் விடுவித்து, இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள கடற்றொழிலாளர்கள் நால்வரும், படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, தமிழ்நாட்டின் கடல் எல்லைக்குள் கரை ஒதுங்க நேரிட்டதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாகக்கூறி, அவர்களைக் கைது செய்தமை சட்டத்திற்குப் புறம்பானதாகும்.

எனவே, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, இரண்டு மாதத்திற்கும் அதிக காலம், சென்னை புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, 4 இலங்கை கடற்றொழிலாளர்களை விடுவிக்குமாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4