சுதந்திர நாள், தமிழ் தேசத்தின் கரிநாள்’: பேரணி பயணிக்கிறது

Mayoorikka
4 years ago
சுதந்திர நாள், தமிழ் தேசத்தின் கரிநாள்’: பேரணி பயணிக்கிறது

ஸ்ரீ லங்காவின் சுதந்திர நாள், தமிழ் தேசத்தின் கரிநாள்’ எனும் தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்  இருந்து கவனயீர்ப்பு  போராட்டம் ஆரம்பமானது.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள்  பாதிக்கப்பட்ட தரப்பினர் அனைவரும்  ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்  இருந்து ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேரணி, முல்லைத்தீவு நகரை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது. 

குறித்த போராட்டத்தில் மத தலைவர்கள்,  வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள்,  சமூக ஆர்வலர்கள், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4