ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையா? சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட தகவல்

Mayoorikka
4 years ago
  ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையா?  சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட தகவல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க கூறியுள்ளார்.

74 ஆவது சுதந்திர தினமான இன்றைய தினம் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கையுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு 197 கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.

ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையை எதிர்பார்த்து நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் புதிய மெகசின் சிறைச்சாலைக்கு முன்பாக இன்று காணப்பட்டனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே சிறைச்சாலை பேச்சாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4