15 வயதுடைய பாடசாலை மாணவி கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

Keerthi
4 years ago
15 வயதுடைய பாடசாலை மாணவி கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கந்தளே, அக்போபுர, பெரமடுவ பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வீட்டில் இருந்த பள்ளி மாணவி கத்தியால் குத்தப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் காதலன் என அடையாளம் காணப்பட்ட இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாள்வெட்டுச் சம்பவத்தின் போது சிறுமியின் தாயும் வீட்டில் இருந்துள்ளதுடன், தாக்குதல் இடம்பெற்ற போது சந்தேகநபர் வீட்டில் பதுங்கியிருந்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட 17 வயதான இளைஞன் கந்தளாய் பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இப்படியான சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4