டொலர் பிரச்சினையால் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,800 கொள்கலன்கள்!

Reha
4 years ago
டொலர் பிரச்சினையால் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,800 கொள்கலன்கள்!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,800 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக, அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுமார் 500 அரிசி கொள்கலன்கள் அவற்றில் அடங்கியுள்ளன. அத்துடன், பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட மேலும் பல உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களும் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அந்த சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

டொலர் தொடர்பான பிரச்சினை உள்ளமையால், குறித்த கொள்கலன்களை விடுவிக்க மத்திய வங்கி தலையிட வேண்டும் என்றும் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4