ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி பெற்றுள்ளார்.

#India #Asia #Rich
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி பெற்றுள்ளார்.

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி பெற்றுள்ளார்.

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட தகவல்களின்படி அதானி 9,050 கோடி டாலர்கள் சொத்துகளுடன் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் உலகளவில் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 10-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி ஆசிய அளவில் அதானி முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, 9,050 கோடி டாலர்கள் சொத்துடன் அதானி முதலிடத்திலும், 8,920 கோடி டாலர் சொத்துடன் அம்பானி 2-ஆவது இடத்திலும் உள்ளனர். அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் 23,230 கோடி டாலர் சொத்துகளுடன் தொடர்ந்து உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்து வருகிறார். ஃபேஸ்புக் பயனாளிகளின் எண்ணிக்கை குறைந்ததாக வெளியான தகவலால் அந்நிறுவன பங்குகள் விலை சரிந்து மார்க் ஜக்கர்பர்க் 12ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.