வடக்கு, கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டம் !

#SriLanka #Development #North #East #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டம் !

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில், உலக வங்கி குழுமத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும், அதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2026 தொடக்கம் 2031 வரையான 06 ஆண்டு காலப்பகுதிக்கு உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்தால் 1,000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி எமது நாட்டுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்குப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 

குறித்த வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வலய ரீதியான உற்பத்தி ஆற்றல் வளங்களை (சுற்றுலா, மீன்பிடி போன்ற) அதிகரித்தல், தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல், தனியார் மூதலீடுகளைக் கவர்ந்திழுத்தல் மற்றும் நிறுவன ரீதியான வலுப்படுத்தல்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு கவனம் செலுத்துகின்ற கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதனடிப்படையில், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் உலக வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும், திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கும் வகையில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!