பணத்துக்காக அல்லது சொத்துக்காகத்தான் காதலிக்கிறான் என்பது உறுதியாக தெரியும்போது, உஷார் பெண்ணே உஷார்……காதல் விதிகள். பாகம் -6.

#Article #Love #Tamil People
 பணத்துக்காக அல்லது சொத்துக்காகத்தான் காதலிக்கிறான் என்பது உறுதியாக தெரியும்போது, உஷார் பெண்ணே உஷார்……காதல் விதிகள். பாகம் -6.

பணத்துக்காக அல்லது சொத்துக்காகத்தான் காதலிக்கிறான் என்பது உறுதியாக தெரியும்போது பெண் வேலை பார்த்து கிடைக்கும் பணமே குடும்பத்துக்கு போதும், வேலை பார்க்காமல் ஜாலியாக சுற்ற வேண்டும் என்ற மனநிலையில் ஆண் இருப்பதை அறியும்போது

தங்கை அல்லது தோழிகள் எவரிடமாவது காதல் வசனங்களை  பேசி கவிழ்க்க முயற்சி செய்வது தெரிந்தால்

கவர்ச்சியாக உடை அணிந்துகொள்.  நான் சொல்லும் நபர்களிடம் நீ அன்பாகப் பேசினால், எளிதாக காரியம் சாதித்துக்கொள்வேன் என்பதுபோல் பேசினால்

காதலிக்கத் தொடங்கிய காலத்துக்குப் பின்னரும் வேறு ஏதாவது ஒரு பெண்ணிடம் அல்லது விபசாரப் பெண்களிடம் உடலியல் ரீதியான உறவு இருப்பதாகத் தெரியவந்தால்

மிக அதிகமான ஆசை உள்ளவனாக, தேவையில்லாத தொந்தரவு கொடுப்பவனாக, நிலைமையை புரிந்துகொள்ளாதவனாக இருந்தால்
முறிந்துபோய்விட்டது என சொன்ன முன்னாள் காதலியுடன் இன்னமும் சந்திப்பு, தொடர்பு இருப்பதாக தெரிந்தால்

வீட்டில் பெண் பார்க்கும் படலம் நடக்கிறது என்றாலும் காதல் பற்றி இன்னும் சொல்லாமல் தட்டிக்கழித்து வருகிறான் என்றால்

வேறு யாராவது பெண் காதலைச் சொன்னபோது, தற்போதைய காதல் பற்றி எதுவும்  சொல்லாமல் ஏமாற்றுவதாகத் தெரிந்தால்

செக்ஸில் விபரீத ஆசிகள் கொண்டவர் என்பது தெரிந்தால், அதாவது இரண்டு பெண்கள், மூன்று பெண்கள், குரூப் செக்ஸ் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுபவராக இருந்தால்.

தவறான நடவடிக்கையினால் செக்ஸ் நோய் வந்தவர் என தெரியவந்தால் அவ்வப்போது மனநிலை பாதிக்கப்படுபவர் என்பது தெரிந்தால்

நடக்காத விஷயத்தை வாழ்வின் குறிக்கோளாக கொண்டிருப்பவர் என்றால், அதாவது ஒருநாளாவது உலக அழகியுடன் வாழ்ந்துவிட வேண்டும் என விரும்புவதுபோல் நினைத்தால்
செக்ஸில் ஆர்வம் இல்லாதவர் அல்லது ஆண்மைக் குறைபாடுடன், உறவுக்கு லாயக்கில்லாதவர் எனத் தெரியவந்தால்

அளவுக்கு அதிகமாக சந்தேகப்படும் குணம் கொண்டவன் என தெரிந்தால்

பெண்கள் அடிமையாக வீட்டோடு அடைந்துகிடக்க வேண்டும்.  முக்கியமான முடிவுகள் எல்லாம் ஆண்தான் எடுக்க வேண்டும் எனும் ஆதிக்க மனப்பான்மை இருப்பது தெரிந்தால்

பிறரது துன்பத்தில் இன்பம் காணும் வக்கிரப் புத்தி இருந்தால்

இதுபோன்ற குறைகளை ஆண்களிடம் காணும்போது, இதையெல்லாம் திருமணத்துக்குப் பிறகு கண்டிப்பாகத் திருத்திவிடலாம் என முட்டாள்தனமாக எண்ணிக்கொண்டிராமல் காதலில் இருந்து விலகிவிடலாம்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4