டொலர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்க அச்சக திணைக்களம்

Prathees
4 years ago
டொலர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்க அச்சக திணைக்களம்

அரசாங்க புத்தகங்கள் உட்பட அச்சிடும் நடவடிக்கைகளுக்காக அரசாங்க அச்சக திணைக்களத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அச்சு காகிதங்கள் அடங்கிய 8 கொள்கலன்கள் டொலர் கிடைக்காத காரணத்தினால் கொழும்பு துறைமுகத்தில் சில காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தன.

இதனால்இ அரசு அச்சடிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் 6 மாதங்களுக்கு போதுமான அச்சு காகிதம் மட்டுமே துறையிடம் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், இதுவரையில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என அரசாங்க அச்சகம் தெரிவிக்கின்றது.

எதிர்காலத்தில் அச்சிடும் காகிதம் கிடைத்தாலும் அச்சடிப்பதில் பெரும் சிக்கல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, நிறுவன ஊழியர்கள் பேப்பரை கவனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4