மின்சாரத்தைத் துண்டிப்பது தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் - பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு

Reha
4 years ago
மின்சாரத்தைத் துண்டிப்பது தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் -  பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு

மின்சார தேவைக்கு அமைய மின்சாரத்தைத் துண்டிப்பது தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 

மின்னுற்பத்தி தேவையான மூலப் பொருட்களின் அளவு, மின்சாரத்திற்கான தேவை மற்றும் விநியோகம் என்பவற்றின் அளவுகள் கவனத்தில் கொள்ளப்படும்.

இதற்கமையவே மின்சாரத்தைத் துண்டிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும். சுமார் 2, 750 மொவொட் மின்சார தேவை காணப்படுமாயின் மின்சாரத்தைத் துண்டிக்க நேரிடும்.

தற்போது அந்த அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4