சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!

Reha
4 years ago
சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!

நுவரெலியா, பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஎலிய காட்டுப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, பொகவந்தலாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 50, 47 மற்றும் 32 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4