தமிழக மீனவர்களின் 135 படகுகள் ஏலத்தில்! - காரைநகரில் 47 இலட்சத்து 50 ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்பனை

Prathees
4 years ago
தமிழக மீனவர்களின் 135 படகுகள் ஏலத்தில்! - காரைநகரில் 47 இலட்சத்து 50 ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்பனை

யாழ். காரைநகரில் வைத்து தமிழக மீனவர்களின் 135 படகுகள் இன்று ஏலத்தில் விடப்பட்டன. அவை 47 இலட்சத்து 50 ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டன.

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்களின் 135 ட்ரோலர் படகுகள் காரைநகர் கடற்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு தடுத்த வைத்திருந்த படகுகளே இன்று ஏலத்தில் விடப்பட்டன.

கொழும்பில் இருந்து வருகை தந்த மீன்பிடித் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் குறித்த படகுகள் ஏலத்தில் விடப்பட்டன.

இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான ஏல விற்பனை பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைந்தன.

இதன்போது 135  படகுகளும் 47 இலட்சத்து 50ஆயிரத்து 500 ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டன. இவற்றில் உச்சபட்சமாக ஒரு படகு 13 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேநேரம் காங்கேசன்துறையிலுள்ள தமிழக மீனவர்களின் 8 படகுகள் நாளை ஏலம் விடப்படவுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4