ஏழாலையில் ஐஸ் போதைப்பொருளுடன் 22 வயது மற்றம் 29 வயதான சகோதரர்கள் இருவர் கைது

Keerthi
4 years ago
ஏழாலையில் ஐஸ் போதைப்பொருளுடன் 22 வயது மற்றம் 29 வயதான சகோதரர்கள் இருவர் கைது

யாழ். ஏழாலைப் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 22 வயது மற்றம் 29 வயதான சகோதரர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும், சுன்னாகம் பொலிஸாரும்  இணைந்து இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 3 கிராம் 58 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4