வரணியில் விசேட அதிரடிப் படையினரின் தாக்குதலில் இருவர் படுகாயம்! (photos)

Keerthi
4 years ago
வரணியில் விசேட அதிரடிப் படையினரின் தாக்குதலில் இருவர் படுகாயம்! (photos)

யாழ்., தென்மராட்சி, வரணிப் பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது எனப் கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிவில் உடையில் வந்த விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும், கொட்டனால் தாக்கப்பட்டு  இன்னொருவருமாக இருவர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் கையில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்வதாகத் தெரிவித்தே தங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது எனத் தாக்குதலுக்குள்ளானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட விசேட அதிரடிப் படையினரைக் கைதுசெய்த கொடிகாமம் பொலிஸார், இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்களை சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதவான் ச.இளங்கோவன் பிணையில் விடுவித்தார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4