நாட்டில் சுமார் 11 இலட்சம் பேர் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Mayoorikka
4 years ago
நாட்டில் சுமார் 11 இலட்சம் பேர் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட 11 இலட்சத்து 70 ஆயிரம் பேர் இதுவரை எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

20 - 29 வயதுக்கிடைப்பட்டவர்களில் 719,000 பேர் இதுவரை எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், 30 - 60 வயதுக்கிடைப்பட்டவர்களில் 03 இலட்சத்து 86 ஆயிரத்து 408 பேர் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 64,234 பேர் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கொவிட் தடுப்பூசியேற்றல் வேலைத்திட்டம், கிராமிய மட்டத்திலும் செயற்படுத்தப்பட்டுவரும் நிலையில் சிலர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதிருப்பது கவலைக்குரிய விடயமென உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4