மருந்துக்கு தட்டுப்பாடு – அதிகரிக்கும் நோயாளிகளின் உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்

Mayoorikka
4 years ago
மருந்துக்கு தட்டுப்பாடு – அதிகரிக்கும் நோயாளிகளின் உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதை தொடர்ந்து மருந்து பொருட்கள் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்பாடு தீவிரமடைந்து, பல நோயாளிகள் மருந்தில்லாமல் உயிரிழக்க நேரிடும் என  ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலைமையில் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளது. அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதி, உணவு பொருள் விநியோகத்துடன் தற்போது மருந்துபொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதை அவதானிக்க முடிகிறது.

டொலர் நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற காரணத்தினால் ஒளடத இறக்குமதியாளர்கள் பாரிய நெருக்கடியினை எதிர்க்கொள்கிறார்கள்.

மருந்து இறக்குமதிக்கான கடன் பற்று பத்திரங்களை வெளியிட முடியாத நிலை காணப்படுகிறது. பெனடோல் மாத்திரைகளுக்கும் தட்டுப்பாடு காணப்படுகிறது. இதனால் சாதாரண நடுத்தர மக்களின் சுகாதார பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4