யாழ்.ஆரியகுளம் பகுதியில் மினி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இளைஞன் உயிரிழப்பு

Mayoorikka
4 years ago
யாழ்.ஆரியகுளம் பகுதியில் மினி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இளைஞன் உயிரிழப்பு

யாழ்.ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பருத்தித்துறை – அல்வாய் பகுதியை சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். அல்வாய் தெற்கைச் சேர்ந்த இந்திரசிங்கம் நிருபன் (வயது 32) என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார்

ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தில் அரச நிறுவனம் ஒன்று பணிபுரிந்து வரும் குறித்த இளைஞர் தனது பணி நிமிர்ந்தம் இன்று அதிகாலை சென்ற சமயம் குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இவ் விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார்  விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4