தபால் மூலம் கடத்திய பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களை கொழும்பு சுங்கவரி சோதகர்களால் பிடிக்கப்பட்டது.

Keerthi
4 years ago
தபால் மூலம் கடத்திய பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களை கொழும்பு சுங்கவரி சோதகர்களால் பிடிக்கப்பட்டது.

தபால் மூலம் கடத்திய பல மில்லியோன் பெறுமதியான போதைப்பொருட்க்களை கொளும்பு சுங்கவரி சோதகர்களால் பிடிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 20 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் இன்று (08) சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனைக்கு அனுப்பப்பட்டநிலையில் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பேச்சாளர், சுங்க பிரதிப் பணிப்பாளர் (சட்ட விவகாரங்கள்) சுதத்த சில்வா தெரிவித்தார்.

இன்று (08) சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு கொழும்பு பிரதேசத்தில் உள்ள 5 அஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட 05 சந்தேகத்திற்கிடமான பார்சல் கடிதங்களை திறந்து சோதனையிட்ட போது போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கிலோ கஞ்சா மற்றும் 50 கிராம் கொக்கெய்ன் போதைப் பொருளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் குறித்த போதைப்பொருள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இப்படியான போதைப்பொருட்கள் இந்தியாவிலிருந்து கட மார்க்கமாகவும் கடத்தப்படுகிறது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4