கொள்ளுப்பிட்டி மற்றும் தங்காலையில் இரு ஜேர்மன் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இலங்கையர்கள்

Prathees
4 years ago
கொள்ளுப்பிட்டி மற்றும் தங்காலையில் இரு ஜேர்மன் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இலங்கையர்கள்

கொள்ளுப்பிட்டியில் உள்ள மரைன் டிரைவ் ஹோட்டலில் 32 வயதான ஜேர்மன் பெண்ணை கற்பழித்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது காதலன் எனக் கூறிக் கொண்ட ஒருவரால் போதைப்பொருள் கொடுத்து பலாத்காரம் செய்ததாக குறித்த பெண் ஞாயிற்றுக்கிழமை கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரும் பாதிக்கப்பட்டவரும் மரைன் டிரைவில் உள்ள ஹோட்டலுக்கு வருவதற்கு முன்னர் கொள்ளுப்பிட்டியில் உள்ள உணவகம் ஒன்றில் மது அருந்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை இலங்கை நாட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கண்டியில் வசிக்கும் நபரால் ஜேர்மன் பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை கைது செய்த பொலிஸார், செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தங்காலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் மற்றுமொரு ஜேர்மன் பெண்ணை கற்பழித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சுற்றுலா வழிகாட்டியான சந்தேகநபர் தங்காலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஜேர்மன் பெண்ணுடன் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபர் எல்ல, பண்டாரவளை பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4