வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் வாகனம் இறக்குமதி செய்ய அனுமதி?

Nila
4 years ago
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் வாகனம் இறக்குமதி செய்ய அனுமதி?

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 சேவைக்காலம் மற்றும் பணம் அனுப்பும் தொகையின் அடிப்படையில் வரிச் சலுகையில் வாகனம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இதற்கு பதிலளித்த தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இது தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
 
இதேவேளை, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் ஒரு டொலர் ஒன்றிற்கு 240 ரூபாவை வழங்க முன்மொழிந்துள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4