தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கீர்த்தி வீரசிங்க இராஜினாமா - காரணம் என்ன ?.

Prasu
4 years ago
தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கீர்த்தி வீரசிங்க இராஜினாமா - காரணம் என்ன ?.

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியிலிருந்து கீர்த்தி வீரசிங்க இராஜினாமா செய்துள்ளார்.

அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட அறிவித்தலை அடுத்து இந்த பதவி விலகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் உள்ளிட்ட குழுவினர், தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வாகனத்தை பயன்படுத்தி ராகம மருத்துவ பீட விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தமைக்கு பொறுப்பேற்று தலைவரை பதவி விலகுமாறு கோரியுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தினால் கிடைக்கப்பெற்ற அறிவித்தலுக்கு அமையவே தலைவருக்கு பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4