சவாலான நேரங்களில் ஆரோக்கியமான பாசிப்பருப்பு பொரித்த முட்டை குழம்பு செய்முறை
#Cooking
#Egg
#curry
Mugunthan Mugunthan
2 years ago
தேவையானவை :
- பாசிப்பருப்பு (சிறு பருப்பு) – 100 கிராம்
- தக்காளி – ஒன்று
- வெங்காயம் – 2
- இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 2
- மிளகாய்த் தூள் – 1/4 மேசைக் கரண்டி
- மஞ்சள் தூள் – 1/4 மேசைக் கரண்டி
- சீரகத் தூள் – 1/4 மேசைக் கரண்டி
- கொத்தமல்லி – சிறிதளவு
- முட்டை – 4
- மிளகுத் தூள் – 1/4 மேசைக் கரண்டி
- உப்பு – தேவைக்கேற்ப
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- கடுகு – 1/4 மேசைக் கரண்டி
- காய்ந்த மிளகாய் – 2
- நெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
- பாசிப்பருப்பை சிறு தீயில் 3 நிமிடங்கள் லேசாக சிவக்க வறுத்து எடுக்கவும்
- வெங்காயம், தக்காளி மற்றும் மல்லித் தழையை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- குக்கரில் பாசிப்பருப்பைப் போட்டு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், சீரகத் தூள், மிளகாய்த் தூள், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, பாதி அளவு வெங்காயம்,
- பச்சை மிளகாய் மற்றும் அரை தேக்கரண்டி நெய் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- வெந்ததும் பருப்பில் ஒரு டம்ளர் வெந்நீர் சேர்த்து உப்பு சேர்க்கவும்.
- ஒரு முட்டையுடன் மீதமுள்ள வெங்காய த்தில் பாதி அளவைச் சேர்த்து, மிளகுத் தூள், உப்பு மற்றும் சிறிதளவு மல்லித் தழை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- ஒரு பவுலில் மற்றொரு முட்டையை அடித்து தனியாக வைக்கவும்.
- தோசைக் கல்லில் நெய் விட்டு, வெங்காயம் கலந்த முட்டைக் கலவையை ஊற்றி வேக விட்டு எடுத்து, சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை
- மற்றும் மீதமுள்ள வெங்காயம் தாளித்து, குக்கரில் வேக வைத்த பாசிப்பருப்பில் கொட்டவும்.
- வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்க்கவும்.
- பிறகு தனியாக அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, மூடி போட்டு சிம்மில் 5 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.
- சுவையும், மணமும் நிறைந்த பாசிப்பருப்பு பொரித்த முட்டை ரெடி.