திருடுபோன சிறுவனின் சைக்கிள், மீட்டு தந்த காவல்துறை... நெகிழ்ச்சியான சிறுகதை போன்ற சம்பவம்

#India #Tamil Nadu #Police
திருடுபோன சிறுவனின் சைக்கிள், மீட்டு தந்த காவல்துறை... நெகிழ்ச்சியான சிறுகதை போன்ற சம்பவம்

கண்முன்னே தனது சைக்கிள் திருடப்பட்டத்தை கண்ட சிறுவனின் மன வேதனையை போக்கும் விதமாக காவல்துறை ஆணையர் துரிதமாக செயல்பட்டு சைக்கிளை மீட்டு கொடுத்துள்ளார்.

சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சிறுவன் கிரிஷ். கடந்த 3ஆம் தேதி இரவு அடுக்குமாடி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது குடியிருப்பில் நிறுத்தி வைத்திருந்த சிறுவனின் சைக்கிளை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச் சென்றார்.

திருடிச் செல்வதை கண்ட சிறுவன் துரத்திச் சென்று திருடனைப் பிடிக்க முயன்றார். ஆனால் திருடன் சைக்கிளுடன் தப்பிச் சென்றார். இதனால் மனமுடைந்த சிறுவன் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் சைக்கிள் திருடு போனதால் கடந்த சில நாட்களாகவே சிறுவன் மனவேதனையோடு இருந்து வந்துள்ளான். சிறுவன் கிரிஷ் வேதனையை அறிந்து கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் இது தொடர்பாக விரைந்து கண்டுபிடிக்கும்படி தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.

தனிப்படை போலீசார் போலீசார் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அடையாளம் தெரியாத நபர் நைசாக அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு செல்கிறார். பிறகு சைக்கிளை திருடிச் செல்கிறார். தன்னுடைய சைக்கிளை திருடிச் செல்வதை கண்டு சிறுவன் கிரிஷ் துரத்திச் செல்வது சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சைக்கிளை திருடி சென்ற மாங்காடு பகுதியை சேர்ந்த அஸ்ரர்(22) என்பவரை போலீசார் கைது செய்து அவனிடமிருந்து சிறுவனின் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட சைக்கிளை கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் சிறுவனின் வீட்டிற்கு சென்று சைக்கிளை கொடுத்து சிறுவனை ஆச்சரியப்படுத்தி உற்சாகப்படுத்தினார். தன்னுடைய சைக்கிளை கண்ட சிறுவன் கிரிஷ் மகிழ்ச்சியில் காவல் துறைக்கு நன்றி என தெரிவித்துள்ளான்.

சிறுவன் கண்ணெதிரே திருடன் சைக்கிளை திருடி சென்றதால் மனதளவில் சிறுவனுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற எண்ணத்திலேயே துரிதமாக செயல்பட்டு சைக்கிளை மீட்டதாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் என்றுமே காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு உதாரணமாக இந்த செயல் இருப்பதாக சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!