வேலை நிறுத்தம் காரணமாக நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன

#SriLanka #Hospital #Employees
வேலை நிறுத்தம் காரணமாக நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன

சுகாதார வல்லுநர்கள் சம்மேளனம் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது.

இதனால் நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நோயாளர்கள் இன்றும் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக  செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பதுளை மாவட்டத்தின் பதுளை பொது வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால் நோயாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வேலை நிறுத்தம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்லவும் கலந்துகொண்டார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4