20 மில்லியன் ரூபாவோடு பறந்த சோதிடரின் மனைவி. மைபோட்டுத் தேடும் சோதிடர் ஐயா?

Keerthi
4 years ago
20 மில்லியன் ரூபாவோடு பறந்த சோதிடரின் மனைவி. மைபோட்டுத் தேடும் சோதிடர் ஐயா?

பிரபல சோதிடர் ஒருவரின் மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன் 20 மில்லியன் ரூபா சொத்துக்களுடன் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முல்லேரியா காவல்துறையினர் கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகேவிடம் நேற்று (10) அறிவித்துள்ளனர்.

முல்லேரியாவ கல்வான பிரதேசத்தில் வசிக்கும் பிரபல ஜோதிடரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இரண்டரை வயது மற்றும் ஒன்றரை வயது குழந்தைகளை அவரது மனைவி கடத்திச் சென்றுள்ளதாக முல்லேரியா காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​பிள்ளைகளையும் சொத்துக்களையும் எடுக்க மனைவிக்கு உரிமை இல்லையா என நீதவான் வினவினார்.

எனினும் குறித்த பெண் சொத்துக்களை அபகரித்துகொண்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தற்போது வெளிநாடு செல்ல முயற்சிப்பதாகவும் மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார். எனவே அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்குமாறு சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பூர்வமான மனைவிக்கு குழந்தைகளையும் சொத்துக்களையும் எடுத்துச் செல்ல உரிமை உண்டு என்றும், அதன் விளைவாக அவர் வெளிநாடு செல்வதைத் தடை செய்ய சட்டப்பூர்வ ஆதாரம் இல்லை என்றும் கூறிய மாஜிஸ்திரேட் அந்தக் கோரிக்கையை நிராகரித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4