அத்தியாவசியப் பொருட்களை, தட்டுப்பாடின்றி விநியோகிப்பது தொடர்பான விசேட குழு இன்று கூடுகிறது!

Reha
4 years ago
அத்தியாவசியப் பொருட்களை, தட்டுப்பாடின்றி விநியோகிப்பது  தொடர்பான விசேட  குழு இன்று கூடுகிறது!

உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில், முதல் முறையாக இன்று கூடவுள்ளது.

உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான குழு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நியமிக்கப்பட்டது.

உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைச் சந்தைக்கு விநியோகிப்பது தொடர்பில் முறையான பொறிமுறையொன்று உடனடியாகத் தயாரிக்கப்பட வேண்டுமென்று ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4