எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்கத் தயார் - நிதி அமைச்சர்

Reha
4 years ago
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்கத் தயார் -  நிதி அமைச்சர்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்கத் தயார் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது தொடர்பாக இன்று (11) பிற்பகல் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு கூட்டத்தில்  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பால் மா, எரிவாயு, கோதுமை மா, சீமெந்து போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும், ஏனைய அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக  நிதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4