இன்றைய தினம் 1259 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

Prathees
4 years ago
இன்றைய தினம் 1259 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் இன்றைய தினம் 1,259 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன்,  இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 625,804 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்றுக்கான மேலும் 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 15,754 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 373 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 594,348 ஆக அதிகரித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4