கடன் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ள நாம் மீள் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கிக்கொள்ள வேண்டும் - ஹர்ஷ டி சில்வா

Reha
4 years ago
கடன் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ள நாம் மீள் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கிக்கொள்ள வேண்டும் - ஹர்ஷ டி சில்வா

சர்வதேச கடன் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ள நாம் உடனடியாக சகல நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து கடன் செலுத்துவதில் மீள் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா  தெரிவித்தார்.

நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன்களை மீளச் செலுத்துவதில் உள்ள நெருக்கடிகள் குறித்து ஆராயும் விதமாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற நிதிக்குழுக்கள் ஒன்றிணைந்து நேற்று முன்தினம் கொழும்பில் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்பின் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

“தற்போதைய நிதி நெருக்கடி நிலைமைகளை நாம் சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தச் சூழ்நிலையில் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு இருக்காது அடுத்த கட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய தீர்மானங்கள் என்ன என்பதையே ஆராய வேண்டும்.

அதற்கு முன்னுரிமை கொடுக்கும் விதமாக நாம் பொது இணக்கப்பாட்டை கண்டுள்ளோம்.

நாடாளுமன்ற நிதிக் குழுக்களின் தலைவர்களும் இதே நிலைப்பாட்டை தான் கொண்டுள்ளனர். அரசாங்கத்திற்கும் இதனை அறிவிக்கவுள்ளோம்” என்றார்.   

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4